விஷால் கைது ?

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக பார்க்கப்படும் விஷால், நடிப்பை தவிர்த்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கள் ஆகிய விஷயங்களில் பிஸியாக இருப்பவர். இதனால் அவர் பல சிக்கலிலும் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது சென்னை எழும்பூர் கோர்ட் விஷாலுக்கு பிடிவார்ண்ட் பிறப்பித்துள்ளது. ஆம், பழைய வழக்கு ஒன்றில் நடிகர் விஷால் ஆஜர் ஆகாததால் பிடிவாரண்ட் பிறபிக்கப்பட்டுள்ளது.

விஷால் தனது நிறுவன ஊழியர்களிடம் பிடித்தம் செய்த வரித்தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை விஷால் மீது வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பல முறை விஷாலுக்கு சம்மன் அனுப்பட்டுள்ளது.

ஆனால், விஷால் இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் நீதிமன்றம் முன்பு ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால், சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவார்ண்டை பிறப்பித்துள்ளது. எனவே, விஷால் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.