Home Uncategorized கலக்க போவது யாரு ஜாக்குலினா இது இப்படி மாறிட்டாங்க ! இனையத்தில் வைரலாகும் ஜாக்குலின் வீடியோ...

கலக்க போவது யாரு ஜாக்குலினா இது இப்படி மாறிட்டாங்க ! இனையத்தில் வைரலாகும் ஜாக்குலின் வீடியோ !

843
0

தொகுப்பாளினிகளில் பலர் ரசிகர்களுக்கு பேவரெட் அந்த வரிசையில் தொகுப்பாளினி ஜாக்குலின் இடம் பிடித்தார் . இவர் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தொடங்கினார் . அப்படி ஒருசில தொடர்களே வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஜாக்குலின் . இவர் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருந்த போதே சில படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார் . இந்த ஆண்டு வெளியான இவர் நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்தார் .

இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது . கடந்த சில மாதங்களாக இவரை தொலைக்காட்சி பக்கமே காணவில்லை .

ஆனால் அவர் நடுவில் சீரியல் கமிட்டாகி பிஸியாக நடித்து வந்திருக்கிறார் . அந்த புதிய சீரியலின் பெயர் தேன்மொழி BA . இந்த சீரியல் மிகவும் கலகலப்பான நெடுந்தொடராக அமையும் என இந்த தொடரின் டைரக்டர் தெரிவித்துள்ளார் . இந்த நிலையில் இந்த தொடரின் புரோமோ சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது . இந்த தொடரானது நகைச்சுவை மிகுந்த தொடராக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது .